அம்பாறையில் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக அனுஷ்ட்டிப்பு!
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை நகரில் பட்டப்பகலில் 1990 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த 69 அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வு ஒன்று (12) வெள்ளிக்கிழமை மாலை புதிய வளத்தாப்பிட்டி நாவலர் சனசமூக நிலைய மண்டபத்தில் முதன் முறையாக உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக புதிய வளத்தாப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் அதன் தலைவரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான […]