Tue. Jul 7th, 2026 22:22:19

Author: admin

இலங்கை

உகந்தையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் சிரமதான பணி.

June 29, 2026

செல்லையா பேரின்பராசா   மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் உகந்தை முருகன் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு வருடாந்தம் மேற்கொள்ளப்படும்  சிரமதான பணியானது இவ்வருடமும் பிரதேச செயலாளர்  உ. உதயஸ்ரீதர்  தலைமையில்  இடம்பெற்றது.   இந்த சிரமதான நிகழ்வில் கணக்காளர் வ. நாகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர்  மு. கங்காதரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு இந்த உன்னதமான பணியை மேற்கொண்டிருந்தனர்.

கல்முனை

கல்முனை நீதிமன்ற வளாகத்திற்கு கத்தார் சேரிட்டியின் அனுசரணையில் பொதுமக்கள் நலனுக்காக நீர் குளிரூட்டி இயந்திரங்கள் அன்பளிப்பு

June 28, 2026

நூருல் ஹுதா உமர் கல்முனை நீதிமன்ற வளாகத்தைப் பயன்படுத்தும் சட்டத்தரணிகள், வழக்குத் தரப்பினர் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இரண்டு நவீன நீர் குளிரூட்டி இயந்திரங்கள் பொதுப் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, நீதிக்கான மய்யம் (Centre for Justice) மேற்கொண்ட ஒருங்கிணைப்பு முயற்சியின் பயனாகவும், கத்தார் சேரிட்டி (Qatar Charity) நிறுவனத்தின் அனுசரணையுடனும் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கத்தார் சேரிட்டி வழங்கிய இரண்டு […]

இலங்கை

முருக பக்தனா(நா)ய்  யாத்திரை செல்லும் சுப்பிரமணியன்- முழுவிபரமடங்கிய சிறப்பு கட்டுரை

June 28, 2026

கடந்த 36 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது  ஓர் அதிசய தெய்வீக நாய் சுப்ரமணியன். பாதயாத்திரை காவலனாக முருகசக்தி பெற்ற நாயாக திகழும் சுப்பிரமணி நேற்று(2 7)சனிக்கிழமை 37 வது நாள் சுப்பிரமணி ,  முத்தமிழ் வித்தகர் பிறந்த காரைதீவு மண்ணுக்கு வந்திருக்கின்றது. இன்று உலகெங்கும் பேசுபோருளாக விளங்கும்  அற்புதமான அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்க நாளுக்கு நாள் கூட்டம் just அதிகமாகின்றது. பௌத்த பிக்குகளோடு வந்த “அலோக” என்ற நாய் எத்துணை வைரலானதோ, […]

இலங்கை

இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் மேலங்கி அறிமுகம்.

June 27, 2026

செல்லையா பேரின்பராசா  இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட மேலங்கி ( T-shirt ) அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை   (27.06.2026) கல்முனையில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ் திருமாறன் தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இத் தொழிற்சங்க ஆலோசகரும், கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தின்  முன்னாள் பிரதம உள்ளக கணக்காய்வாளருமான எச் .எம் . றசீட், கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக தொழிற்சங்க […]

கல்முனை

16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மோதுண்டு சேதமடைந்த மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் , கடைகள்-கல்முனையில் சம்பவம் 

June 27, 2026

பாறுக் ஷிஹான் வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின்  சாரதியத்தினால் மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் ,  பல  கடைகள் மோதுண்டு பல சேதங்களும் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பிரதான சந்தை வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  விபத்துக்குள்ளான சிற்றூர்தி மரக்கறி பண்டங்களை சந்தைக்கு எடுத்து வருவது வழமை.இச்சமயம் சாரதி வேலைப்பளு காரணமாக சென்றிருந்த வேளை 16 வயதுடைய சிறுவன் குறித்த சிற்றூர்தி  […]

இலங்கை

ஹரக் கட்டா’ இலஞ்ச வழக்கு: மூவர் ஜூலை 3 வரை விளக்கமறியலில்!

June 27, 2026

பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘ஹரக் கட்டா’வை பூஸ்ஸ சிறையிலிருந்து மாற்றுவதற்காக 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஹொரண தொகுதி சஜப அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் அருண் ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவரையும் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களில் இருவருக்கு கடுமையான உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாக அவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்து […]

இலங்கை

எல்லே கார்னிவல் மகளிர்  போட்டி இன்று ஆரம்பம்; நாளை இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்!!

June 27, 2026

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு 2003 சாதாரண தர மற்றும் 2006 உயர்தர பழைய மாணவர் குழுவினரின் ஏற்பாட்டில், “ELLE Carnival Women’s Trophy 2026 – Season 02” எனும் மகளிர் எல்லே விளையாட்டுப் போட்டி இன்று 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் நாளை  28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையில் , காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. நாளை(28) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஒன்றியத் தலைவர் யூ.துஷான் தலைமையில் […]

கல்முனை

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

June 27, 2026

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம் ( பாறுக் ஷிஹான்) மீன் களஞ்சிய வாடியில் உள்ள  வாயு மீள் நிரப்பும்   பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளிவாசல் அருகில் கடலோரம் அமைந்துள்ள மீன் களஞ்சிய வாடியில்  வெள்ளிக்கிழமை(26) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பழுதடைந்திருந்த எரிவாயு நிரப்பு நிலையத்தில் பழுதுபார்ப்பதற்காக வருகை தந்தவர்களே இவ்வனர்த்தத்தில் […]

இலங்கை

மகளிர் அமைப்பின்தலைவியாக சிவகெளரி.!

June 27, 2026

-அஸ்லம் – தலைநகரில் தனித்துவத்தோடு இயங்கும் புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் தலைவியாக திருமதி சிவகௌரி (சுடரி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளியல்மாணி சிறப்புக் கற்கை மற்றும் உளவியல் சான்றிதழ் கற்கை நிறைவு செய்துள்ளதுடன் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர் ஆவார். தொழில் ரீதியாக 2008 இல் பதிவாளர் நாயக திணைக்களத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக முதல் நியமனம் பெற்றவர். தற்போது வவுனியா மாவட்ட பதிவகத்தில் […]

இலங்கை

உப தலைவியாக தெரிவானார் சிபானியா.!

June 27, 2026

(அஸ்லம் எஸ்.மௌலானா) புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் உப தலைவியாக எம்.எப். பெளசுல் சிபானிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் மகளிர அமைப்பின் அநுராதபுரம் மாவட்டத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இவர் அன்மையில் நடைபெற்ற நிர்வாகத் தெரிவில் அனைவரதும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று உப தலைவியானார். கலைப்பட்டதாரி ஆசிரியையான இவர்தமிழ் இலக்கணத்தை முறையாக கற்றவர். அந்திக்கரை என்ற மரபுக் கவிதை தொகுப்பினை அதற்கு சான்றாக சமர்பித்த சிறந்த கவிஞராவார். அத்தோடு முற்றத்து நிலா பாடல் என்ற […]